நடிகை அனிகா, நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம், என்னை அறிந்தால் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். அதன் பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது மலையாளத்தில் ஓ மை டார்லிங் எனும் படம் மூலம் கதநாயகியாகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் அனிகா லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளதாக பலரும் எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்து வந்தனர். இதனால் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ‘கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே தான் அந்த காட்சியில் நடித்தேன். அதே சமயம் அந்த காட்சி தவறாக தெரியாது. இதை படம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் உணருவார்கள்’ என கூறியுள்ளார்.