மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இவர் தமிழில் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். நடிகர் அஜித் மற்றும் நயன்தாராவின் ரீல் மகள் அனிகா என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அனிகா சுரேந்திரனுக்கு தற்போது 18 வயது ஆகியுள்ளது. இதன் காரணமாக அனிகா படங்களில் ஹீரோயனாக நடிக்க தொடங்கிவிட்டார். அனிகாவின் முதல் படமான புட்ட பொம்மா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு மலையாள சினிமாவில் ஓ மை டார்லிங் என்ற படத்தின் மூலம் அனிகா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

இந்த படத்தின் டிரைலர் வீடியோ அண்மையில் வெளியான நிலையில் அதிக அளவு லிப்லாக் காட்சிகளில் அனிகா நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனிகா அதிக அளவு முத்த காட்சிகளில் நடித்தது எதற்காக என்பது குறித்த சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, ஓ மை டார்லிங் படம் காதல் திரைப்படம் என்பதால் அதில் முத்த காட்சிகள் இடம் பெறுவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்தப் படத்தில் முத்த காட்சிகள் இருக்குமே தவிர ஆபாசம் இருக்காது. படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது புரியும். கதைக்கு முத்த காட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தது என இயக்குனர் கூறியதால் நான் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்று அனிகா கூறியுள்ளார். மேலும் அனிகாவின் பேட்டி தற்போது வைரல் ஆகி வருகிறது.