தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்களிடையே வரவேற்பு பெற்று வருகின்றது. இதில் ஒன்றான ராஜா ராணி 2 தொடரும் மக்களிடையே பிரபலமாக இருந்து வருகின்றது.

இதில் வில்லியாக நடிகை பிரியா விஸ்வநாத் நடித்து வந்த நிலையில் அவர் தற்போது தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இனி அவருக்கு பதிலாக ஆஷா கௌடா நடிக்க இருக்கின்றார். இதற்கு முன்பாக அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தின் சீதை தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.