காஸியாபாத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பிரின்ஸ் என்ற இளைஞர், தனது நண்பன் ஷோயப் என்பவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. பிரின்ஸின் மனைவி துளசியுடன் ஷோயப்பிற்கு இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக இந்தச் சதி அரங்கேறியுள்ளது.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து பிரின்ஸைக் கொலை செய்து, சடலத்தை அடையாளம் தெரியாமல் மறைப்பதற்காக வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் வீசியுள்ளனர். அதன் பின்னர் துளசியை ஷோயப் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நாட்களாக பிரின்ஸைக் காணவில்லை என அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் இந்த ‘பிளைண்ட் மர்டர்’ மர்மம் விலகியது.

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஷோயப்பைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி, சம்பந்தப்பட்ட வீட்டின் செப்டிக் டேங்கைத் தோண்டியபோது, அங்கிருந்து பிரின்ஸின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஷோயப் மற்றும் துளசி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர்.