சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான உணவு சோதனைகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் ‘முட்டை சோடா’ வீடியோ இணையவாசிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு தெருவோரக் கடைக்காரர், சாதாரண சோடா பானத்தில் பச்சையான முட்டையை உடைத்து ஊற்றி, மசாலாக்களை கலந்து வாடிக்கையாளருக்கு பரிமாறுகிறார்.
இந்நிலையில் ஏற்கனவே ‘பான் பராக் டீ’, ‘சாக்லேட் பிரியாணி’ என வினோத உணவுகளால் கடுப்பாகி இருக்கும் நெட்டிசன்கள், இந்த முட்டை சோடாவைப் பார்த்ததும் இன்னும் கொந்தளித்துப் போயுள்ளனர். இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “இதற்குப் பதிலாக நேரடியாக விஷத்தையே கொடுத்துவிடலாமே?” என காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இதனால் முட்டையை சமைக்காமல் பச்சையாக சோடாவுடன் கலந்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும் என்றும், இது போன்ற ‘விசித்திரமான’ சோதனைகள் உணவின் மீதான மரியாதையையே கெடுத்துவிடுவதாகவும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
