4 வயது சிறுமி ஒருவள் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பிஞ்சு உடலின் பல்வேறு இடங்களில் பற்களால் கடித்தும், உதடுகளைக் குதறியும் மிகக் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மனிதநேயமற்ற செயலால் ஏற்பட்ட கடுமையான வலியாலும், காயங்களாலும் அந்தச் சிறுமி தற்போது கோமா நிலைக்குச் சென்று உயிருக்குப் போராடி வருகிறாள். பார்ப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் இந்தத் துயரச் சம்பவம், சமூகத்தில் பதுங்கியிருக்கும் மிருகத்தனமான மனிதர்களின் வக்கிர முகத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதல் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஒரு பிஞ்சு குழந்தை, இவ்வளவு பெரிய வன்முறைக்கு ஆளானது ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
