சமூக வலைதளங்களில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான காணொலிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதில், பிரமிப்பை ஏற்படுத்துவதுடன், இயற்கையின் நிஜமான, சில சமயங்களில் கொடூரமான முகத்தைக் காட்டும் வீடியோக்களும் அடங்கும். அப்படிப்பட்ட ஒரு காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி, பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ட்விட்டரில் @AmazingSights என்ற கணக்கு மூலம் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொலியில், ஒரு வேட்டையாடும் பறவை (கழுகு அல்லது பருந்து என நம்பப்படுகிறது) தனது கூர்மையான நகங்களால் உயிருள்ள எலியைப் பிடித்து, மின் கம்பியில் அமர்ந்தவாறே அதைக் கிழித்து உண்ணும் காட்சி இடம்பெற்றுள்ளது. பறவையின் இறுக்கமான பிடியிலிருந்து எலி தன்னை விடுவிக்கப் போராடி, வலியால் துடிப்பதைக் காணொலியில் காணமுடிகிறது. பறவை, தனது கூர்மையான அலகால் இரையைத் துண்டாக்கி உண்கிறது.
<a href=”http://

“>
இந்த 12 விநாடி காணொலி, 2,00,000-க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், “இயற்கை அழகானது, அதேசமயம் கொடூரமானது,” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தது உட்பட, நூற்றுக்கணக்கான கருத்துகளையும், பகிர்வுகளையும் பெற்று வருகிறது. இயற்கையின் வேதனையான இந்தக் காட்சி, பலரை உணர்ச்சிவசப்படச் செய்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.