
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி பகுதியை சேர்ந்த பால்துறை என்பவரது மகள் செல்வம். இவர் பெருமாள்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்கூட்டி ஒன்றில் சாலையை கடக்கும் முயற்சித்த போது செல்வம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே செல்வம் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பஸ் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செல்வம் மீது பேருந்து மோதிய காட்சி அந்த பேருந்தில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது.
https://x.com/thinak_/status/1857024851971616959