தூத்துக்குடி விமான நிலையத்தில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் அரசியல் சூழல் எப்போதும் போன்று தான் இருக்கிறது. புதிய கட்சி தொடங்கியவர்கள் பற்றி 2026-ல் தான் தெரியும். நான்கு ஆண்டுகள் திமுக அரசு ஆட்சி செய்கிறது. மக்களுக்கு செய்ய வேண்டிய எதையும் செய்யவில்லை.
தமிழக முழுவதும் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. மாலை 5 மணிக்கு மேல் பெண்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருக்கிறது. திமுக அவர்களது ஆட்சி நன்றாக இருப்பது போல பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இது வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும் என சசிகலா கூறியுள்ளார்.
