கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் ஒரு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் ரீல்ஸ் மோகத்தால் சில இளைஞர்கள் அங்கு நைட்டி அணிந்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு பெண்களை முகம் சுளிக்கும் வைக்கும் விதமாக அவர்கள் நடந்து கொண்டனர்.
அதாவது நைட்டி அணிந்து கூட்டமாக வந்த இளைஞர்கள் ரயில் பெட்டி போன்று வரிசையாக நின்று ஆடினர். அதோடு நைட்டியை தூக்கி மாடல் அழகி போன்றும் செய்து காட்டினர். இது அங்கிருந்த பெண்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொது இடத்தில் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது.
இதன் காரணமாக போலீசார் வழக்கு பதிவு செய்து சஜு (24), மார்சல் (25) உட்பட ஏழு இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
