சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் போலீஸார், தற்போதும் மனிதாபிமானத்துடன் நடந்துகொண்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
அதாவது போக்குவரத்து போலீஸார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த ஒரு வெளிநாட்டு வாலிபரை மறித்தனர். அவர் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. பொதுவாக போலீஸார் என்றாலே கண்டிப்புடன் இருப்பார்கள் என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் அந்த உரையாடல் அமைந்தது.
View this post on Instagram
அந்த வாலிபரிடம் ஆவணங்களைச் சரிபார்த்த போலீஸார், அவரிடம் மிகவும் கனிவாகவும், மரியாதையுடனும் பேசினர். அந்த வாலிபரை ஒரு வெளிநாட்டவராகப் பார்க்காமல், ஒரு விருந்தினராகப் பாவித்து அவர்கள் நடந்து கொண்ட விதம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.
அந்த வாலிபருடன் போலீஸார் உரையாடும் வீடியோவை ‘pk_mast_official’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது நெட்டிசன்கள் பலரும் பாசிட்டிவ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
