“இல்லத்தரசிகள் வீட்டில் சும்மா இருப்பதில்லை, அவர்கள் செய்யும் உழைப்பிற்கு மிகப்பெரிய பொருளாதார மதிப்பு உண்டு” என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
கணவனிடம் பராமரிப்புத் தொகை கோரிய ஒரு வழக்கினை விசாரித்த நீதிபதி “வேலைக்குச் செல்லாத மனைவியைச் ‘சும்மா இருப்பவர்’ (Idle wife) என்று அழைப்பது மிகவும் தவறானது; இது இல்லத்தரசிகளின் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் செயல்” என்று மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ஒரு கணவன் அலுவலகத்தில் சிறப்பாகப் பணியாற்றுகிறார், என்றால், அதற்குப் பின்னால் வீட்டை நிர்வகிக்கும் மனைவியின் உழைப்பு ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது என்பதைச் சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், படித்த பெண்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதைத் தன்னிச்சையான ஒன்றாகக் கருத முடியாது குழந்தைகள் , மற்றும் வீட்டை பொறுப்புடன் பார்த்துக்கொள்கிறார்கள்.. என்றும், பராமரிப்புத் தொகையைத் தீர்மானிக்கும்போது அவர்களது வீட்டு வேலையின் மதிப்பைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
