இமயமலையின் கீழ் அமைந்துள்ள புவி தட்டுக்கள் அடிக்கடி நகர்வதால் அப்பகுதியில் இருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டில் பைஜூரா மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 1:45 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்திலும் உணரப்பட்டுள்ளது. அதோடு அரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த நில அதிர்வினால் நேபாள நாட்டு மக்கள் உடனே வீடுகளிலிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.