உலக அளவில் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 350 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நோபல் சட்டத்தின்படி பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் அடையாளம் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்படுகின்றது. ஆனால் பரிந்துரை செய்தவர்கள் தாங்கள் முன்மொழிந்த பெயரை வெளியிடலாம்.

இந்த நிலையில் இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்களாவது துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நோட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பேர்க், ஒரு சர்வதேச போர் குற்ற நீதிமன்றத்தை நிறுவ செயல்படும் உக்கிரன் குழு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள புதின் எதிர்ப்பாளரான அலெக்சி நாவல்னி, பத்திரிக்கையாளரான விளாடிமிர் காரா முர்சா மற்றும் ஜனநாயக ஆதரவு இளைஞர் இயக்கம் வெஸ்னா ஆகியோர் அடங்குவர்.