உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தின் தரைப்பகுதி ஓடும்போதே உடைந்ததில், 7 வயது சிறுமி சக்கரங்களுக்கு அடியில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை மதியம் இந்த விபத்து நடந்துள்ளது. கங்கிரி கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் அனன்யா (07), தனது அண்ணன் யஜத்துடன் மவுண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார். பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே இருந்த பேருந்தின் தரைப்பகுதி திடீரென உடைந்தது.

இதில் எதிர்பாராத விதமாக ஓடும் பேருந்தின் அடியில் விழுந்த சிறுமி மீது, பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் மார்பு நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமியை, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டுப் பேருந்தை நிறுத்தச் செய்தனர்.
इस खबर को पढ़ रूह कांप जा रही 👇
यूपी के अलीगढ़ में 7 साल की अनन्या स्कूल बस से घर लौट रही थी।
वह चलती बस के टूटे फर्श से नीचे गिर गई और उसी बस के पहिये के नीचे आने से उसकी मौत हो गई। pic.twitter.com/IVUjRQ4hXz
— Priya singh (@priyarajputlive) March 1, 2026
“>
உடனடியாக ஓட்டுநர் சிறுமியை அவரது தந்தையிடம் அழைத்துச் சென்றார், ஆனால் அதற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தனது மகளின் சிதைந்த உடலைக் கண்டு தந்தை மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கலங்கச் செய்தது. ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய பள்ளிப் பேருந்தை அடித்து நொறுக்கியதுடன், ஓட்டுநரையும் சரமாரியாகத் தாக்கினர்.

மேலும், அலிகார்-காஸ்கஞ்ச் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) இல்லாமலும், ஓட்டை விழுந்த நிலையிலும் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹோலி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரித்துக் கொண்டிருந்த வீட்டில், மகளின் மரணச் செய்தி கேட்டு அந்தத் தாயார் மயங்கி விழுந்தது நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது.
