மதுரா, பிருந்தாவனம் மற்றும் பர்சானா உள்ளிட்ட பிரஜ் பகுதிகளில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், சில இளம்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஹோலி கொண்டாட்டத்தின் போது சில கும்பல்கள் பெண்களை மட்டும் குறிவைத்து அநாகரீகமாக நடப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ​பெண்களின் அந்தரங்க உறுப்புகளைக் குறிவைத்து பிச்காரி கொண்டு வண்ணம் அடிப்பதாகவும், அதைத் தட்டிக்கேட்டால் “நீ இங்கே சாகவா வந்திருக்கிறாய்? உன் போன் நம்பரை கொடுத்துவிட்டுப் போ, ராத்திரி பேசலாம்” என ஆபாசமாக மிரட்டுவதாகவும் ஒரு இளம்பெண் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பெண், பர்சானாவில் வழிமறித்த கும்பல் தனது கண்ணில் வண்ணம் பூசி சித்திரவதை செய்ததாகக் கூறியுள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.