பொதுவாக, நெடுஞ்சாலைகளில் அதிக பொறுப்புணர்வுடன் செல்ல வேண்டிய வாகனம் என்றால் அது ஆம்புலன்ஸ்தான். ஆனால், ஒரு அதிவேக நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸில் நடந்த ஒரு சம்பவம், அலட்சியத்தின் உச்சத்தைக் காட்டியுள்ளது.
ஓடிக்கொண்டிருந்த ஆம்புலன்ஸின் பின் கதவு திடீரெனத் திறந்து, உள்ளே இருந்த நோயாளி ஸ்ட்ரெச்சருடன் கீழே விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தை ஆம்புலன்ஸுக்குப் பின்னால் வந்த வாகனத்தில் இருந்தவர்கள் தங்கள் கேமராவில் படம் பிடித்துள்ளனர்.
तमिलनाडु के कून्नूर में दिल दहला देने वाला वाकया,
एम्बुलेंस का दरवाज़ा खुला और मरीज़ स्ट्रेचर समेत सड़क पर गिर गया
लेकिन ड्राइवर को ज़रा भी खबर नहीं हुई, वो आगे बढ़ता रहा
ज़िंदगी बचाने वाली गाड़ी ही लापरवाही की मिसाल बन गई pic.twitter.com/QfFaD3GVAM— Arzoo Alam (@ArzooAl34714966) November 10, 2025
நோயாளி ஸ்ட்ரெச்சருடன் கீழே விழுந்த பிறகும், ஆம்புலன்ஸ் டிரைவர் அதனைக் கவனிக்காமல் வேகமாகக் கிளம்பிச் சென்றுள்ளார். இதனால், நோயாளி ஸ்ட்ரெச்சருடன் நெடுஞ்சாலையின் நடுவில் தனித்து விடப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக, பின்னால் எந்த வாகனமும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வீடியோ வைரலான நிலையில், “பொறுப்புள்ளவர்களே இப்படித் தூங்கினால் எப்படி?” என்றும், “கதவு ஏன் திறந்தது? இது மிகப்பெரிய தவறு” என்றும் இணையவாசிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
