உலகின் மிக நீளமான மூக்கு கொண்ட துருக்கி நாட்டை சேர்ந்த நபர் காலமானார். மெஹ் மெட் ஓசியூரெக் என்ற 75 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். 8.8 சென்டி மீட்டர் நீளமுள்ள மூக்குடன் இவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தான் ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட நபர் என்று அடிக்கடி இவர் கூறி வந்துள்ளார். கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்  உயிரிழந்தார். இவரது மறைவுக்கு உலக நாடுகளை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.