டெல்லியில் பணியாற்றி வந்த நீதிபதி அமன் சர்மா, குடும்பத் தகராறு மற்றும் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 1-ம் தேதி இரவு தனது தந்தைக்கு போன் செய்த அமன், இதுவே தனது கடைசி அழைப்பு என்று கூறி அழுதுள்ளார். இதனையடுத்து அவரது தந்தை டெல்லிக்கு விரைந்த நிலையில், அதற்குள்ளாகவே மே 2-ம் தேதி மதியம் அமன் தற்கொலை செய்துகொண்டார்.

அமன் சர்மாவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு இருந்து வந்ததாகவும், அமன் தற்கொலை செய்தபோது அவரது மனைவியின் சகோதரியும் வீட்டிலேயே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அமனின் மனைவி உயர்பதவியில் இருக்கும் தனது உறவினர்களை வைத்து அமனை சித்ரவதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமனின் உடல் அவரது சொந்த ஊரான அல்வாருக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை கண்ணீர் மல்க சிதைக்குத் தீ மூட்டினார்.

இறுதிச் சடங்கின் போது அமனின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.