மேற்குவங்க மாநிலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களை வீடு வீடாகச் சென்று மிரட்டி வருவதாகப் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ஃபால்டா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், “பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்றும், பாஜகவுக்கு வாக்களித்திருந்தால் “உங்கள் வீடுகளை எரித்துவிடுவோம்” என்றும் திரிணாமூல் கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் பெரும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அங்கு வன்முறை ஏற்படுமோ என்ற ‘திக் திக்’ சூழல் நிலவி வருவது அந்த மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
