பிரபல நடனப் போட்டியான ‘டான்ஸ் இந்தியா டான்ஸ்’ நிகழ்ச்சியில் தனது அபாரமான திறமையால் நடுவர்களையும் மக்களையும் வியக்க வைத்தவர் ஷியாம் நாத் கோஸ்வாமி.
ஆனால், இன்று அவர் ஐதராபாத் தெருக்களில் ஒரு சிறிய வண்டியில் சமோசா விற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த ஒரு கலைஞன், குடும்பச் சூழ்நிலை மற்றும் போதிய வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வாழ்வாதாரத்திற்காகத் தெருவோரம் கடை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பார்ப்போரின் கண்களைக் குளமாக்குகிறது.
கடின உழைப்பு மற்றும் திறமை இருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காத கலைஞர்களின் எதார்த்த நிலையை இவரது கதை பிரதிபலிக்கிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “திறமைசாலிகளுக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்” என உருக்கமாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
