பெங்களூருவைச் சேர்ந்த அலுவலக ஊழியர் ஒருவர், தனது வேலையை விட்டுச் செல்லும்போது வழக்கமான உருக்கமான மின்னஞ்சலுக்குப் பதிலாக, முழுவதும் மீம்ஸ்கள் நிறைந்த ஒரு ஜாலியான விடைபெறுதல் மெயிலை அனுப்பி இணையத்தில் வைரலாகி வருகிறார். பவிஷா பாட்டியா என்ற சக ஊழியர், இந்த வித்தியாசமான மின்னஞ்சலை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

அதில், “சரி நண்பர்களே, நான் கிளம்புறேன்” என்பது போன்ற பிரபலமான மீம்ஸ்களைக் கொண்டு அந்த ஊழியர் தனது விடைபெறுதலை நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த ஊழியரின் கிரியேட்டிவிட்டியைப் பாராட்டி வருகின்றனர். பொதுவாக அலுவலகங்களில் வேலை முடிந்து செல்லும்போது அனுப்பப்படும் மெயில்கள் மிகவும் ஃபார்மலாக இருக்கும் நிலையில், அதை மாற்றும் வகையில் இந்த மீம்ஸ் மெயில் அமைந்திருந்தது.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Bhavisha Bhatia (@bhavisha.mp4)

“>

பவிஷாவும் பதிலுக்கு ஒரு மீம்ஸையே அந்த ஊழியருக்கு அனுப்பி விடைபெற்றார். இந்தச் சம்பவம், தற்கால அலுவலகக் கலாச்சாரத்தில் நகைச்சுவை மற்றும் எளிமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை எடுத்துக்காட்டுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்