ஐதராபாத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஸ்ரீவீணா (28), அமெரிக்காவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு பிரசாந்த் ரெட்டி என்பவரைத் திருமணம் செய்த ஸ்ரீவீணா, தனது கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தனது தோழியின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற இடத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவர் நீச்சல் குளத்தில் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக ஸ்ரீவீணாவின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்த எம்.எல்.ஏ, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஸ்ரீவீணாவின் உடலைத் தாயகம் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இச்சம்பவம் ஐதராபாத்தில் உள்ள அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.