இந்திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்திய அதிரடித் தாக்குதலின் முதலாம் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் 8 முக்கிய விமானப்படை தளங்கள் சேதமடைந்தன என்றும், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தான் சந்தித்த பலத்த அடியை நினைவுபடுத்தும் வகையில், இந்தத் தினத்தை இந்தியா கொண்டாடி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மீண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அதன் விளைவு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள இந்திய ராணுவத் தளபதிகள், பாகிஸ்தான் ராணுவம் போர்க்களத்தில் காட்டுவதை விட பொய்ப் பிரச்சாரத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறது என்று கிண்டலாகத் தெரிவித்துள்ளனர்.