கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கிருஷ்ணா, தனது வீட்டில் வேலை செய்து வந்த ஸ்மிதா (47) என்ற பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். கேரளாவைச் சேர்ந்த ஸ்மிதா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தப்ப முயன்றபோது, ஆத்திரமடைந்த தீபக் கிருஷ்ணா அவரை உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கினார்.

இதைத் தடுக்க வந்த மற்ற வேலைக்காரப் பெண்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்மிதா, சிகிச்சை பலனின்றி கேரள மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஸ்மிதாவின் கணவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீபக் கிருஷ்ணாவை கைது செய்தனர்.

விசாரணையில், இவர் ஏற்கனவே ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கியால் சுட்டு தகராறு செய்த வழக்கில் சிறைக்குச் சென்று வந்தவர் என்பது தெரியவந்தது. தற்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தொழிலதிபரே தனது வீட்டில் வேலை செய்த பெண்ணைக் அடித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.