டெல்லி வடக்கே நரேலா புறநகர் பகுதியில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. இங்கு 9 மற்றும் 12 வயது உடைய இரண்டு சிறுமிகள் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக சென்றனர். அப்போது அனில் குமார் என்பவர் சிறுமிகளை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் திடீரென இரண்டு சிறுமிகளையும் தனியாக ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அணிலின் நண்பரான முனில் குமார் என்பவரும் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளார். அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த சிறுமிகள் தனது குடும்பத்தினரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அணில் குமாரையும், முனில் குமாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.