மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் தேவிதாஸ்(38). இவரது மனைவி பாக்கியஸ்ரீ(33). கடந்த 2013 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது சுமார் 12 ஆண்டுகளாக இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் கோதி ரயில்வே கேட் அருகே இருக்கும் தண்டவாள பகுதிக்கு சென்றனர்.
அப்போது இகதபுரியை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
