பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நடிகை, இந்திய இம்மிmigration அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த ஒரு வித்தியாசமான அனுபவத்தை வீடியோவாகப் பகிர, அது இப்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பியுள்ளது. வழக்கமான சோதனையின் போது அந்த அதிகாரி “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்க, அவர் “கராச்சி” என்று பதிலளித்துள்ளார். உடனே அந்த அதிகாரி, “உங்களுக்கு உருது தெரியுமா? நாம் உருதுவிலேயே பேசலாமே” என்று சொல்லி அந்தச் சூழலையே கலகலப்பாக மாற்றியுள்ளார்.
அந்த நடிகையின் உடை மற்றும் நடை அழகைப் பார்த்த அதிகாரி, அவர் விமானப் பணிப்பெண்ணாக (Cabin Crew) வேலை செய்கிறாரா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நடிகை இல்லை என்று சொல்லவும், “நிச்சயமாக நீங்கள் ஏதோ ஒரு ஸ்பெஷலான ஆள் தான்” என்று அதிகாரி புகழ, “நான் ஒன்றுமில்லை” என்று அந்த நடிகை சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.
மேலும், “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று சொல்லாவிட்டால், இங்கே இம்மிmigration-இல் உங்களை ரொம்ப நேரம் காத்திருக்க வைப்பேன்” என்று அந்த அதிகாரி விளையாட்டாக மிரட்டியதாக அந்த நடிகை அந்த வீடியோவில் கூறியுள்ளார். இறுதியில் தான் ஒரு நடிகை என்று அவர் சொன்ன பிறகே அந்த அதிகாரி சிரித்துக்கொண்டே அனுமதித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதும், நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
I think majority of Indian🇮🇳 men are crazy for beautiful Pakistani🇵🇰 girls.
🇮🇳❤️🇵🇰. pic.twitter.com/fC1qUWywCJ— Nazia Sanam (@NaziaSanam7) January 16, 2026
“இந்திய ஆண்களுக்கு அழகை ரசிக்கத் தெரியும், இதில் என்ன தவறு?” என்று ஒரு தரப்பினரும், “ஒரு அரசு அதிகாரி இதுபோல வேலையின் போது கடலை போடுவது (Flirting) முறையா?” என்று மற்றொரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். எது எப்படியோ, இந்தியா – பாகிஸ்தான் எல்லைத் தாண்டிய இந்த ‘கியூட்’ மோதல் இப்போது சோஷியல் மீடியாவில் செம ட்ரெண்டிங்!
