ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான திரில்லர் வெற்றிக்குப் பிறகு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா செய்த ஒரு நெகிழ்ச்சியான செயல் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.
நேற்று நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், லக்னோ அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட். இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்புடன் விளையாடிய அவர், 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
🚨SANJIV GOENKA HUG PANT AFTER WIN AGAINST SRH🚨
– Sanjiv Goenka and Rishabh Pant on the ground after LSG’s first win.❤️
— Sam (@Cricsam01) April 5, 2026
போட்டி முடிந்ததும் மைதானத்திற்கு வந்த சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட்டை நேரில் சந்தித்து உற்சாகத்துடன் கட்டிப்பிடித்துத் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வீரர்களிடம் அவர் காட்டிய சில கோபமான ரியாக்ஷன்கள் விமர்சனத்திற்குள்ளான நிலையில், தற்போது பண்ட்டை அவர் அன்போடு அரவணைத்த விதம் சமூக வலைதளங்களில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இருவரும் மைதானத்தில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஒரு கேப்டனாக ரிஷப் பண்ட் முன்னின்று அணியை வழிநடத்திய விதம், உரிமையாளர் கோயங்காவை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
