இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான அரையிறுதி ஆட்டத்தைக் காண வான்கேடே மைதானத்தில் திரை நட்சத்திரங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் குவிந்தனர். மைதானத்தில் வீரர்கள் அதிரடி காட்டிய வேளையில், மைதானத்திற்கு வெளியேயும் சுவாரசிய நிகழ்வுகள் அரங்கேறியது .

நீண்ட காலத்திற்குப் பிறகு முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சந்தித்துக் கொண்ட இந்த நிகழ்வில், மகேந்திர சிங் தோனி, சாக்‌ஷி தோனி மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் ஒன்றாக நின்றிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சத்தம் கேட்கவில்லை என்றாலும், ரோஹித் சர்மாவின் உடல் தகுதியைக் (Fitness) கண்டு வியந்த சாக்‌ஷி, “நீங்கள் மிகவும் ஃபிட்டாகத் தெரிகிறீர்கள்” (You look so fit) எனப் பாராட்டுவதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் சாக்ஷி தன் கணவன் முன்னிலையிலையே ரோகித் சர்மாவை பாராட்டிய போது அமைதியாக தோனி அதனை பார்த்து ரசித்தார் என்றும் கூறப்படுகிறது.

தோனியின் தலைமையில் 2007-லும், ரோஹித் சர்மாவின் தலைமையில் 2024-லும் இந்தியா உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 2024 வெற்றிக்குப் பிறகு ரோஹித், விராட் கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர்.