மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 2011 உலகக் கோப்பை நாயகன் மகேந்திர சிங் தோனி நேரில் வந்து ஆதரவு அளித்த இந்த ஆட்டத்தில், களத்திற்கு வெளியேயும் பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.
This was so wholesome 😭🫶🏻❤️pic.twitter.com/30didZvSLB
— isHaHaHa (@hajarkagalwa) March 5, 2026
மைதானத்தில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் அடித்த பந்தை பும்ரா பிடித்தபோது, அது அவுட் என்று நினைத்து தோனியின் மனைவி சாக்ஷி உற்சாகத்தில் குதித்தார். ஆனால், அது ‘பம்ப் பால்’ என்பதை முன்கூட்டியே கவனித்த கூல் கேப்டன் தோனி, தனது மனைவியை நோக்கி ‘உட்கார், உட்கார்’ என்று அமைதியாகக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆட்டத்தைக் காண அம்பானி குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களான அனில் கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
தோனி மற்றும் ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பையை வெல்லும் மூன்றாவது இந்தியக் கேப்டன் என்ற சாதனையைப் படைக்க சூர்யகுமார் யாதவ் துடிக்கிறார். வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மேலும் இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
