இந்தியாவில் மருத்துவராக விரும்புபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முதலாமாண்டு மருத்துவ மாணவி ஒருவர் பேசிய காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அரசு கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால், கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளே ஒரே வழி என்ற நிதர்சனத்தை அவர் அந்த வீடியோவில் விளக்குகிறார்.

மருத்துவக் கனவைத் துரத்தும் மாணவர்கள் புத்தகங்களை மட்டும் படிக்காமல், விலையுயர்ந்த பயிற்சி வகுப்புகள், பல ஆண்டுகால காத்திருப்பு மற்றும் நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. முறையான திட்டமிடலும் பொருளாதார பலமும் இல்லாமல் இந்தப் பாதையில் இறங்குவது மாணவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும் என்பதை அவர் வெளிப்படையாகக் கூறுகிறார்.

சுமார் ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோ, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் மருத்துவராக முடியாது என்று சொல்லவில்லை; மாறாக, இந்தப் பயணத்தில் இருக்கும் வலிகளையும் உண்மைகளையும் முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கிறது. பலர் வெறும் கனவுக்காகத் தங்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் இழந்துவிட்டு இறுதியில் பாதியிலேயே தவிக்கும் நிலையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
<a href=”http://

“>
@Jimmyy__02 என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த காணொளி மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், பலரும் தங்களின் தனிப்பட்ட கசப்பான அனுபவங்களை இதன் பின்னூட்டத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்தத் தகவல் மாணவர்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.