இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் அதனை அனைத்து ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் மற்றும் ஆதார் கார்டை வைத்திருக்கும் அனைவரும் இரண்டையும் இணைக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.

இதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி அதாவது இன்னும் 10 நாட்களில் முடிவடைகிறது. அப்படி இணைக்காவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள அனைத்து வருமே செப்டம்பர் 30ம் தேதி போல் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்து இருக்க வேண்டும். எனவே இதுவரை ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காதவர்கள் உடனே வேலையை முடித்து விடுங்கள்.