கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நேற்று நடைபெற்ற  விஜயின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்ற கூட்டத்தில், கட்டுக்கடங்காத அளவில் மக்கள் திரண்டதால் திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர்.

இந்த நெரிசலில், கரூரைச் சேர்ந்த ஆகாஷ் (24) மற்றும் கோகுலஸ்ரீ (24) என்ற நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி உயிரிழந்தது, மனதை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே இவர்களது திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இருவரும் இந்நிகழ்ச்சிக்கு சென்றபோதே இந்த சோகம் நேர்ந்தது.

மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த ஆகாஷ் மற்றும் கோகுலஸ்ரீ மரணம், அவர்களது குடும்பத்தினரிடையே மட்டுமின்றி, பகுதியைச் சுற்றியுள்ள மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.