கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழந்த 39 பேருக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த பரிதாபகரமான சம்பவம் பாதுகாப்பு குறைபாட்டால் நிகழ்ந்ததாக தொலைக்காட்சி ஒளிபரப்புகள் மூலம் தெரிகிறது. மின்தடை ஏற்பட்டதையடுத்து பரபரப்பாக மக்கள் நகர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன் இந்த அமைப்பு நான்கு மாவட்டங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்தியது. அதற்கான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னமே செய்யப்பட வேண்டியது அவசியமாக இருந்தது” என தெரிவித்தார்.