பிக்பாஸ் 7-வது எபிசோட் தொடங்கும் தேதியை புரோமோவுடன் விஜய் டிவி அறிவித்துள்ளது. பிரபல விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் கணக்கில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் நடைபெறும். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6 சீசன்களை கடந்து வெற்றிகரமாக 7-வது சீசன் வரை வந்துள்ளது. இந்நிலையில், தற்போது பிக் பாஸ் 7 ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அக்டோபர் ஒன்றாம் தேதி நிகழ்ச்சி துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.