லியோ படத்திற்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஹாஷ்டேக் மூலமாக தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோலிவுட்டில் ஜெயிலர் ஜவான் என சினிமா ரசிகர்கள் பலரும்  எதிர்பார்த்த படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக லியோ தான் என தங்களது எதிர்பார்ப்பை பூஸ்ட் செய்து கொண்டு வெய்ட்டிங்கில் ரசிகர்கள் காத்து நிற்கின்றனர். ஏற்கனவே லியோ அப்டேட் வந்து ஒரு மாதங்கள் கடந்த நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி லியோ இரண்டாவது பாடல் வெளியாகும் என ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவர்களும் வருகிற வாரத்தில் லியோ விற்கான 2 வது  பாடலுக்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். ஆனால்,

எதிர்பார்த்த நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில்,  படத்தை தயாரிக்கும் நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவிடம் ஒரு ட்விட்  கூட வராததால் பொறுமை இழந்த நெட்டிசன்கள், அப்டேட் கேட்டு வித்தியாசமான முறையில்  டார்ச்சர் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதன்படி, பூட்டி வச்சு பூஜை பண்ணு என்ற ஹாஷ்டேக் -உடன் லியோவிற்கான ப்ரமோஷன் பணிகளை விரைவாக தொடங்குமாறும்,  அடுத்தடுத்த அப்டேட்களை விரைவாக அளிக்குமாறும்  பட குழுவினரிடம் ரசிகர்கள் ஹேஷ்டேக் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.