இந்தியக் கலாச்சாரத்தில் பெண் குழந்தைகள் மற்றும் மருமகள்களை ‘லட்சுமி’ தேவியின் அவதாரமாக மதிக்கும் உயரிய பண்பு, ஒரு வெளிநாட்டு மருமகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சாண்ட்ரா என்ற பெண், இந்தியர் ஒருவரைத் திருமணம் செய்துள்ளார். ஒருநாள் அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரது மாமனார் அவரிடம் வந்து சிறிது பணத்தைக் கொடுத்து ஆசி வழங்கினார்.
எதற்காக இந்தப் பணம் என்று சாண்ட்ரா வியப்புடன் கேட்டபோது, “நீ இந்த வீட்டின் லட்சுமி, நீ மகிழ்ச்சியாக இருந்தால்தான் இந்த வீடு செழிப்பாக இருக்கும்” என்று மாமனார் கூறியது அவரை நெகிழச் செய்தது.தனது மாமனார் காட்டிய இந்த அன்பையும், இந்தியப் பாரம்பரியத்தையும் கண்டு வியந்த சாண்ட்ரா, இது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
“நான் ஒரு உக்ரைன் பெண்ணாக இருந்தாலும், பெண்களுக்கு இவ்வளவு மரியாதை தரும் இந்த இந்தியக் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது” என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், பெண்களைத் தெய்வமாகப் போற்றும் நமது பண்பாட்டைப் பாராட்டி கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
