தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 4 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றை விரைவாகப் பரிசீலித்து தகுதியானவர்களுக்கு உடனடியாக ரேஷன் கார்டுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய கார்டுகள் விரைந்து வழங்கப்படும் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் அடுத்தகட்டமாகப் புதிய பயனாளிகளுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.