தமிழக அரசானது விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் ஆரோக்கியத்தை அறிய உதவும் இணைய தளத்தினைத் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பனை மரங்கள் குறித்த ‘நெட்ட நெட்ட பனைமரமே’ என்ற விளக்கப் பட புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

அதன்படி, விவசாயிகள் புவிசார் கணக்கெடுப்பு எண் மூலம் மண்ணின் ஆரோக்கிய நிலையை அறிய இந்த இணைய தளத்தினை அணுகலாம். இந்த இணைய தளத்திற்கான முகவரி http://tnagriculture.in/mannvalam என்பதாகும். இந்த இணையதளத்தில் விவசாயிகள் pH, கரிமக் கார்பன் மற்றும் சுண்ண நீற்றுச் சார்பு போன்ற இதர பிற விவரங்களையும் பெறலாம்.