புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் ஆட்டோ மற்றும் பேருந்து விபத்து ஏற்பட்டதில் ஆட்டோவில் இருந்து எட்டு பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தார்கள். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த சோதனையில் ஒரு ஆட்டோவில் 5 குழந்தைகளுக்கு மேல் ஏற்றி செல்லும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆட்டோக்களுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள கம்பிகளை உடனடியாக ஓட்டுநர்கள் அகற்ற வேண்டும் எனவும் ஆர்டிஓ விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்டோக்கள் இயங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு கட்டாயமாக ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடை மட்டுமே அணிய வேண்டும். ஐந்து குழந்தைகளுக்கு மேல் குழந்தைகளை ஏற்றிச் சென்றால் ஆட்டோ ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.