தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பலன்களை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு உதவும் விதமாக கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் ராமகிருஷ்னா புற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.