உத்தரகண்ட் மாநிலம் டேராடூனின் டாலன்வாலா பகுதியில் இளம்பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, ஆபாசமாக நடந்துகொண்ட இளைஞரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். ஓல்டு டாலன்வாலா சாலையில் அந்த இளம்பெண் நடந்து சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்த கரண்ஜீத் சிங் (25) என்ற நபர், தனது பேன்ட் ஜிப்பை திறந்து பாலியல் ரீதியாக அநாகரீகமாக செயல்பட்டுள்ளார்.

இந்த அருவருக்கத்தக்கச் செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கரண்ஜீத் சிங்கை மடக்கிப் பிடித்து சிறையில் அடைத்தனர்.