சீனா, குவாங்சௌ நகரில் நடைபெற்ற ‘ஃபயர்ஃபிளை காமிக் கன்வென்ஷன்’ (Firefly Comic Convention) என்ற அனிமேஷன் திருவிழாவின்போது, பெண் காஸ்பேயர்கள் (Cosplayers) தாங்கள் கால்களை எலுமிச்சைச் சாறு தொட்டியில் வைத்து, அதனை ‘ஃபுட் ஜூஸ்’  என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு விற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by @bayarea.kulture

இந்த விசித்திரமான ஸ்டாலில் ஒரு கப் எலுமிச்சைச் சாற்றின் விலை இந்திய மதிப்பில் சுமார் 670 ரூபாய்  என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இதைப் பொருட்படுத்தாமல் பலர் அதை வாங்குவதற்காக வரிசையில் நின்றதுடன், சில முகம்சுளிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சீன சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் கோபமும் சுகாதாரக் குறித்த கவலைகளும் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து விழித்துக்கொண்ட விழா ஏற்பாட்டாளர்கள், உடனடியாக அந்த ஸ்டாலை அங்கிருந்து அப்புறப்படுத்தியதுடன், சம்பந்தப்பட்ட காஸ்பேயர்களை நிகழ்விடத்தை விட்டு வெளியேற்றினர். சுகாதாரம் மற்றும் ஒழுக்க நெறிமுறைகளை மீறிய இந்தச் செயல் இணையத்தில் தற்போது கடுமையான விவாதப் பொருளாகியுள்ளது.