கர்நாடக மாநிலம் பல்லாரி பகுதியில் கொன்னூரு சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராஜேஸ்வரி என்ற மனைவியும் ஏழு மாதத்தில் அஸ்பினி என்ற குழந்தையும் உள்ளது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்று தகராறு முற்றியது.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் ஆத்திரத்தில் தன் மனைவியை வீட்டில் உள்ள சுத்தியலால் அவரது கணவர் கொடூரமான முறையில் துடிக்க துடிக்க அடித்துக் கொலை செய்தார். பின்னர் அவருடைய ஏழு மாத குழந்தையையும் விடாமல் சுத்தியலால் கொடூரமான முறையில் துடிக்க துடிக்க அடித்து கொலை செய்தார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரு சடலங்களையும் வைத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் தலைமறைவான கொன்னூரு சாமியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
