பொதுமக்களின் நல்வாழ்விலும், துயரமான சூழ்திகளில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களின் பாதுகாப்பிலும் தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் எப்போதுமே மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார். எந்தவொரு இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக வழங்க வேண்டும் என்பதில் அவர் சிறிதும் சமரசமின்றி செயலாற்றி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, வெளிநாடுகளிலோ அல்லது பிற இடங்களிலோ ஆபத்தில் சிக்கியுள்ள மக்கள் அனைவரும் எவ்வித ஆபத்துமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே முதலமைச்சரின் திட்டவட்டமான அறிவுறுத்தலாகும். இதற்காகத் தூதரகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து உரிய அரசு அதிகாரிகளைக் கொண்டு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சரின் இந்த நேரடி உத்தரவின் அடிப்படையில்தான், தமிழக அமைச்சர்கள் உடனடியாக டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். டெல்லியில் நடைபெறும் ஒவ்வொரு மீட்பு நடவடிக்கை மற்றும் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் முதல்வர் விஜய்க்குத் தொடர்ந்து உடனுக்குடன் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

“>

 

எந்தச் சூழலிலும் பொதுமக்களின் பாதுகாப்பே தமக்கு முதன்மையானது என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர், அவர்களின் துயர் துடைக்கத் தேவையான அனைத்து வழிகளிலும் சிறந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அரசின் இந்தத் துரிதமான மற்றும் தீவிரமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.