வானத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த எயர் இந்தியா விமானத்தில், பண்டிகையைக் கொண்டாடும் விதமாக பணிப்பெண்கள் ஆண் பயணி ஒருவருக்கு ராக்ஷி கட்டிய நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வழக்கமாக விமானப் பயணம் என்பது நெறிமுறைகள் மற்றும் வழக்கமான சேவைகளுடன் கூடிய ஒன்றாக மட்டுமே இருக்கும் நிலையில், இந்த பண்டிகை நாளில் பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே உருவான இந்த பாசப்பிணைப்பு அனைவரின் இதயங்களையும் தொட்டுள்ளது. விமானப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பணிப்பெண்கள் அன்புடனும் புன்னகையுடனும் பயணி ஒருவரின் மணிக்கட்டில் ராக்ஷியைக் கட்டி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
பணி நிமித்தமாகத் தங்கள் சொந்தக் குடும்பத்தையும் சகோதரர்களையும் பிரிந்து தூரத்துச் பயணங்களில் இருக்கும் ஊழியர்களுக்கும், பயணத்தில் இருக்கும் மனிதர்களுக்கும் இடையே இந்தச் சிறிய செயல் மிகப்பெரிய நெகிழ்ச்சியையும் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியது. இந்த அன்பான நிகழ்வைக் கண்டு சக பயணிகளும் தங்களது மகிழ்ச்சியை கைதட்டி வெளிப்படுத்தினர்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் எயர் இந்தியா ஊழியர்களின் இந்த அன்பான பண்பைப் பாராட்டி கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். மனித நேயத்திற்கும் அன்பிற்கும் எல்லைகளோ, இடமோ கிடையாது என்பதை இந்த நெகிழ்ச்சியான சம்பவம் உணர்த்தியுள்ளது. பண்டிகை நாட்களில் பணிச்சுமைக்கு மத்தியிலும் பயணிகளுக்குக் குடும்ப உணர்வைத் தந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
See this Instagram video by @sudhanshukaushik https://t.co/HdyFSZ6QP5
“>
