சீனா தன்னை உலகிலேயே மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு வல்லரசு நாடாகவும், அதிநவீன தொழில்நுட்பங்கள், மின்னினும் கட்டிடங்கள், அதிவேக ரயில்கள் மற்றும் பிரம்மாண்டமான விமான நிலையங்கள் நிறைந்த ஒரு நவீன தேசமாகவும் உலகிற்கு அடையாளப்படுத்தி வருகிறது.

ஆனால், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, சீனாவின் இந்த பளபளப்பான பிம்பத்தை முற்றிலும் உடைத்து எறிந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் தனது பிம்பத்தை எப்போதும் உயர்வாகக் காட்டுவதற்காக சீனா கடுமையான விளம்பரப் பிரச்சாரங்களை மேற்கொள்கிறது.

இருப்பினும், இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ, அந்நாடு உலகிடமிருந்து மறைக்க நினைத்த அதன் உண்மையான மறுபக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வைரல் வீடியோக்களில், சீனாவின் விளம்பரப் பிரச்சாரங்கள் இந்தியாவின் நிலைமையோடு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றன. ஆனால், உண்மை நிலை வெளிவரும்போது சீனாவின் ஒட்டுமொத்தப் படமும் மாறிவிடுகிறது.

மேலும் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் காணப்படும் குப்பைகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, சுகாதாரம் மற்றும் சமமற்ற பொருளாதார வளர்ச்சி போன்ற பல அடிப்படைப் பிரச்சினைகள் சீனாவின் பல நகரங்களிலும் அப்படியே நீடிக்கின்றன என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது நாட்டின் நற்பெயரைக் காப்பதற்காக இதுபோன்ற வீடியோக்களை சீன அரசு உடனடியாக இணையத்தில் இருந்து நீக்கி தணிக்கை செய்ய முயற்சித்தாலும், அவை தொடர்ந்து இணையத்தில் வைரலாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.