“தமிழ்நாடு முழுக்க எம்ஜிஆர் அலை வீசினப்ப கூட திருச்சியில நாம 2, 3 தொகுதிகள்ல ஜெயிச்சோம்.. ஆனா தவெக இவ்வளவு தூரம் வரும்னு நாங்க நிஜமாவே எதிர்பார்க்கல!” என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ள அதிரடிப் பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் திறந்த மனதோடு பேசிய அவர், “நாம் தவெகவை ஒருபோதும் எதிரியாக நினைக்கவில்லை; நாம் அதிமுகவுக்கு எதிராக பக்கா ஸ்கெட்ச் போட்டு வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், இடையில் திடீரென வந்து அவர்கள் வென்றுவிட்டார்கள்” என எதார்த்தமான உண்மையை உடைத்துப் பேசியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் தவெக-வின் அசுர வளர்ச்சியை திமுகவின் மிக மூத்த தளபதிகளில் ஒருவரான கே.என்.நேருவே பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருப்பது, கோட்டை வட்டாரத்தில் தவெக-வின் செல்வாக்கு எந்தளவுக்கு ஆழமாக இறங்கியுள்ளது என்பதைப் புரிய வைப்பதுடன், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கான த்ரில்லரையும் எகிற வைத்துள்ளது!
