பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர, பிற பொது இடங்களில் மாடுகளை வெட்ட அதிரடித் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு தமிழக அளவில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது!

கோவை பொது இடங்களில் மாடுகள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளர் சூர்யபிரசாந்த் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

“தமிழக அரசு கடந்த 1976-ஆம் ஆண்டிலேயே பசு வதையைத் தடை செய்துள்ளது என்றும், 2020-லும் சென்னை உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் விதிகளை மீறி மாடுகள் வெட்டப்படவில்லை என்பதைத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி (DGP) ஆகியோர் போர்க்கால அடிப்படையில் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவால் கோவை உட்பட தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகைக்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!